சங்கர கல்லூரியில் "நயா 2017" கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா


கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கர கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் "நயா 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை மற்றும் கலாச்சார விழா நடத்தி வருகிறது. இவ்விழாவில் தெனிந்திய கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா மேடை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நிகழ்ச்சியினை கல்லூரி இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

 





நிகழ்ச்சியில் கல்லூரி துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் பேசுகையில், மாணவர்கள் திறமையில் வெற்றி உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இதில், ஒருங்கினைப்பாளர்கள் மூலம் மாணவர்களுக்கான குறும்படம், குழு நடனம், முக ஓவியம், வினாடி வினா, நெருப்பில்லா சமையல், திறமை மற்றும் அறிவு சம்மந்தமான நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் தென் இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி வளாகங்களில் ஆங்காங்கே உணவகங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டது. 



இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் பரிசுப் பொருட்களை வழங்கினார். துறை தலைவர் பிரியா கல்யாணசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். ஒருங்கினைபாளர்கள் திருஞான சம்பந்தன், நித்யா, சரவணக்குமார் மற்றும் விஷ்ணு பிரியதர்ஷினி ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். 

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...